
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், சார்பாக புதூர் ஏரியில் சட்டவிரோதமாக டிராக்டர் மற்றும் டிப்பர் லாரி மூலம் ஜேசிபி வண்டியை கொண்டு சுமார் 20 அடி முதல் 30 அடி வரை ஆழமாக 500-க்கும் மேற்பட்ட லோடு மண் எடுத்து விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க சென்றபோது மண் கடத்தும் கும்பலால் பத்திரிகையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
அக்கம் பக்கத்தில் விசாரித்தால் சட்டவிரோத மண் எடுக்கும் கும்பலுக்கு தலைவாசல் தாசில்தார், தலைவாசல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உடந்தை எனக்கு தெரிய வருகிறது. இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார்கள். அதன்பிறகு பத்திரிகையாளர்கள் தலைவாசல் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்கள்.
இதையறிந்த தலைவாசல் இன்ஸ்பெக்டர் சட்டவிரோதமாக மண்ணெடுக்கும் கும்பலை தொடர்பு கொண்டு, “நீங்களும் பத்திரிகையாளர் பணம் கேட்டதாக புகார் கொடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறியதால் அதன்படி மண் கடத்தும் கும்பலின் தலைவர் பிரபாகரன் பத்திரிகையாளர் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
அப்புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் பத்திரிகையாளர் மிரட்டி வருவதாக தகவல் வந்துள்ளது. மேலும் தலைவாசல் வட்டாட்சியர், மண் எடுக்க அனுமதி வழங்கியது போல முன்தேதி இட்டு உத்தரவு ஒன்றை தயார் செய்து வைத்துள்ளாராம். சட்டத்தை காக்க வேண்டிய தாசில்தாரும் இன்ஸ்பெக்டரும் கூட்டு சேர்ந்து கனிம வளங்களை கொள்ளையடிக்கும் கும்பலுக்கு உடந்தையாக செயல்படுவது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அப்பகுதி பெண்களிடம் விசாரிக்கும் போது ” எவ்வளவோ போலீசை பார்த்திருக்கோம் இந்த பொம்பள போலீஸ் மாதிரி யாரையும் பாக்கல” என்று முணுமுணுத்தார்கள். அருகிலுள்ள வயதான பாட்டி ” சீ பொம்பளையா நீ ” என்று ஆக்ரோஷமாக பெண் இன்ஸ்பெக்டரை திட்டியதையும் பார்க்க முடிகிறது.
தாசில்தார் மீதும் இன்ஸ்பெக்டர் மீதும் விரைவில் புகார் அளிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளார்களாம்.


மணல் திருட்டு இதற்க்கு குழந்தையாக இருக்கும் தாசில்தார் மீதும் தலைவாசல் பெண் ஆய்வாளரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இது மாவட்ட ஆட்சியர் கையிலே உள்ளது இந்த நிகழ்வை கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் அவர் என்ன செய்கிறார் என்று அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்