Last Updated:
பிகார் மாநிலம் பாட்னாவில் பரோல் கைதி மருத்துவமனையில் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவில் பரோல் கைதியை மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு கும்பல் சுட்டுக் கொன்ற பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் பக்சர் (Buxar) மாவட்டத்தைச் சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி சந்தன் மிஸ்ரா மருத்துவ காரணங்களால் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை ஐந்து பேர் கொண்ட கும்பல் மருத்துவமனையில் திடீரென புகுந்து சந்தன் மிஸ்ராவை சுட்டுக் கொன்றனர். சந்தன் மிஸ்ரா மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ள நிலையில், பழிக்குப் பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
78th murder in 46 days in Bihar 🚨
Few goons entered a top hospital in Patna, kílled a man & ran awayThis is Gangs of Wasseypur in real life in Bihar or even worse 💔
But no Media will call it Jungle Raj of BJP 🙂👍 pic.twitter.com/8XB2BGkYsK
— Ankit Mayank (@mr_mayank) July 17, 2025
இந்த படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த 46 நாட்களில் 78 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
July 18, 2025 9:12 AM IST

