அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அதில் பேசியதாவது ” அரசுப் பள்ளி ஒன்றில் மகாவிஷ்ணு என்ற ஒருவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். அவர் எந்தக் கட்சிக்காரர் யார் என்பதெல்லாம் தெரியாது. அப்படி அவர் என்ன தவறாகப் பேசிவிட்டார். அவர் தவறாக எதுவும் பேசவில்லை. நம்முடைய முன்னோர்கள், மறுபிறவி, பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. சாமி இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் எல்லோரும் சாமியை கும்பிட்டுவிட்டு போகிறோம். ஒருவர் கடவுள் இருக்கு என்று சொல்கிறார்.

மற்றொருவர் கடவுள் இல்லை என்று சொல்கிறார். இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் மகாவிஷ்ணுவை கொள்ளை அடித்தவர் போல அன்பில் மகேஸ் பொய்யாமொழி அப்படி பொங்குகிறார். கட்டப்பஞ்சாயத்து மாதிரி பேசுகிறார். இதை ஒரு மிகப்பெரிய பிரச்னையாக்கி இருக்கிறர்கள். இதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. ஒரு விஷயத்தை மறைப்பதற்கு இன்னொரு விஷயத்தை இப்படி பரப்பி விட்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.
