தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து, 2 ஆண்டுகளில் இதுவரை ₹4,803.38 கோடி மதிப்பிலான 5,292.17 கிரவுண்ட் மனை மற்றும் கட்டிடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தகவல் அளித்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அறிவித்தது.

