Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2025
in அரசியல் செய்திகள்
0
“உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “எஸ்.ஐ.ஆர் பணி மோசடி என குற்றம் சாட்டினார்கள். ஆனால் உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெற வேண்டும் என்றுதான் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெறுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு விமர்சனங்கள் செய்தன. அதையெல்லாம் மீறி பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து தெரியவருவது, உண்மையான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

அதேபோல தமிழகத்தை பொறுத்தவரை எஸ்.ஐ.ஆர் எதிர்க்க காரணம், பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்தது. அதேபோல மாநகராட்சி, நகராட்சி போன்ற நகரப் பகுதிகளிலே வசிக்கிறவர்கள் அந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்கிறார்கள். குடிபெயர்ந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்ளும் போது, இறந்தவர்கள் மற்றும் குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள், போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்கப்பட்டு உண்மையான நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.

ஒரு நியாயமான நேர்மையான தேர்தல் நடைபெற எஸ்.ஐ.ஆர். பணி மிகவும் முக்கியம். 21 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், தற்போதுதான் நடைபெறுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று விட்டது” என்று கூறினார்.

பி.எல்.ஓ க்கள் வீடுவீடாக சென்று படிவத்தை வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்தப் பணி சுணக்கமாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பி.எல்.ஓ வாக நியமிக்கப்பட்டவர்கள் நான்காம் வகுப்புதான் படித்துள்ளனர். இதை நாங்கள் தெரிவித்தும் மாற்றாமல் உள்ளனர். வேண்டும் என்றே திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் பணி முறையாக நடைபெறக்கூடாது என சில அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

அரசாங்கம் வாய்மொழி உத்தரவாக இவ்வாறு சொல்லி இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் நேரடியாக அதிகாரிகளை நியமிப்பதில்லை. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்கள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து அலுவலர்களை நியமிக்கின்றனர். அப்படி நியமிக்கும்போது, தகுதியானவர்களை நியமிக்காததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதற்கு மேலாவது தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு எஸ்.ஐ.ஆர் பணிக்கு முரண்பாடாக செயல்படுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



.

Previous Post

பிகாரின் நம்பிக்கை நட்சத்திரம் தேஜஸ்விக்கு சரிவு ஏன்?

Next Post

அமெரிக்கா: தாறுமாறு விலைவாசி; தோல்வியை தந்த மக்கள்! உஷாரான ட்ரம்ப் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? |After Electoral Setback, Trump Removes Taxes on Tomatoes and Beef

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்கா: தாறுமாறு விலைவாசி; தோல்வியை தந்த மக்கள்! உஷாரான ட்ரம்ப் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? |After Electoral Setback, Trump Removes Taxes on Tomatoes and Beef

அமெரிக்கா: தாறுமாறு விலைவாசி; தோல்வியை தந்த மக்கள்! உஷாரான ட்ரம்ப் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? |After Electoral Setback, Trump Removes Taxes on Tomatoes and Beef

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In