Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதங்களை கடந்த மனிதநேயம்..! தீவிரவாதிகளுக்கு அன்பின் மூலம் பதிலடி கொடுத்த ரியல் ஹீரோக்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 24, 2025
in அரசியல் செய்திகள்
0
மதங்களை கடந்த மனிதநேயம்..! தீவிரவாதிகளுக்கு அன்பின் மூலம் பதிலடி கொடுத்த ரியல் ஹீரோக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளுக்கு எதிராக, அன்பின் கருவி கொண்டு எதிர் தாக்குதல் நடத்திய உள்ளூர் மக்கள், நாட்டு மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளனர். ஈவு இரக்கமற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சையத் அடில் ஹுசைன் ஷா. குதிரை சவாரி தொழில் செய்து வரும் உள்ளூர்வாசியான இவர், தாக்குதலில் இருந்து பெண் ஒருவரை பாதுகாக்கும் நோக்கில், தீவிரவாதியின் துப்பாக்கியை தைரியமாக பிடுங்க முயன்றுள்ளார். அப்போது, தீவிரவாதிகளின் துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டாவால் குண்டடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் சோகம் என்னவென்றால், வயதான பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் கொண்ட அவரது குடும்பம், சையத்தின் வருமானத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வந்துள்ளது. உயிரை துச்சமென துறந்த சையத்தின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இதனிடையே, கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவரை அவரது மனைவி மற்றும் மகன் கண் முன்னே தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது குறித்து பேசிய மஞ்சுநாத்தின் மனைவி பல்லவி, “பிஸ்மில்லாஹ், பிஸ்மில்லாஹ்….” என்று கோஷமிட்டபடி 3 இஸ்லாமிய உள்ளூர் ஆண்கள் தங்களை மீட்டதாகத் தெரிவித்தார். அவர்கள் தனது சகோதரர்கள் என்றும் பல்லவி உணர்ச்சிப் பொங்க கூறினார்.

அதேபோல, சத்தீஸ்கரில் இருந்து சுற்றுலா சென்ற 4 குடும்பங்களை தாயுள்ளத்தோடு பாதுகாத்துள்ளார் காஷ்மீரில் கம்பளி துணி வியாபாரம் செய்யும் நசகத் அலி. குண்டு சத்தம் கேட்டதும், அசம்பாவிதத்தை உணர்ந்த நசகத் அலி, சத்தீஸ்கரை சேர்ந்த 4 குடும்பங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்கவைத்துள்ளார். இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த சுற்றுலா பயணியை உள்ளூர் இளைஞர் ஒருவர் தோளில் தூக்கிச் சென்ற காட்சி காண்போரை கலங்க வைத்தது.

#JUSTIN ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் காயமடைந்த சுற்றுலாப் பயணியை தோளில் தூக்கி சென்ற உள்ளூர் நபர்#JammuKashmir #Pahalgam #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/Qz8QD8QxLj


— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 23, 2025

அதேபோல, தாக்குதலில் உயிர் பிழைத்த சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வழங்கிய உள்ளூர் மக்கள், பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தினர். ஒரு இடத்தில் மட்டுமல்ல, இதேபோல பல்வேறு பகுதிகளில் உள்ளூர் மக்களின் அன்பு கரம் நீண்டது.

மதங்களை கடந்த இந்த மனித நேயம்தான் இந்திய மக்களின் அடையாளம். இதை சிதைக்க நினைத்தவர்களுக்கு தங்கள் அன்பின் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர் இந்தியர்கள்.

Location :

Jammu and Kashmir

First Published :

April 24, 2025 8:25 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Pahalgam Terror Attack | மதங்களை கடந்த மனிதநேயம்..! தீவிரவாதிகளுக்கு அன்பின் மூலம் பதிலடி கொடுத்த ரியல் ஹீரோக்கள்



.

Previous Post

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? சொட்டு சொட்டாக பாதிக்கப் போகும் பாகிஸ்தான்!

Next Post

கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In