Last Updated:
ஏ.டி.எம்.களில் ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கையை முதலில் 75% ஆகவும், பின்னர் மார்ச் 31, 2026ம் ஆண்டுக்குள் 90% ஆகவும் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏடிஎம்களில் ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டுகள் மட்டுமே வரும் என்று தகவல்கள் வெளியாகின.
2026 மார்ச் மாதத்திற்குள் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறும் என யூடியூப் சேனலில் வெளியான செய்தி தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்து வங்கிகளும் ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மக்களிடையே இது பெரும் குழப்பத்தைத் தூண்டியது. ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கையை முதலில் 75% ஆகவும், பின்னர் மார்ச் 31, 2026ம் ஆண்டுக்குள் 90% ஆகவும் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏடிஎம்களில் ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டுகள் மட்டுமே வரும் என்று தகவல்கள் வெளியாகின.

மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுத்ததிலிருந்து ரூ.500 நோட்டு இப்போது மிக உயர்ந்த மதிப்புடைய நோட்டாக பார்க்கப்படுகிறது. புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அணுகுவதை அதிகரிக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வங்கிகளும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் (WLAOs) தங்கள் ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை தவறாமல் விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. செப்டம்பர் 30, 2025 க்குள், அனைத்து ஏடிஎம்களிலும் 75% குறைந்தது ஒரு கேசட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Is the ₹500 note set to be phased out by 2026? 🤔
A #YouTube video on the YT Channel ‘CAPITAL TV’ (capitaltvind) falsely claims that the RBI will discontinue the circulation of ₹500 notes by March 2026.#PIBFactCheck
✔️@RBI has made NO such announcement.
✔️₹500 notes have… pic.twitter.com/NeJdcc72z2
— PIB Fact Check (@PIBFactCheck) June 3, 2025
ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
ரூ.100 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து, இந்த ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் இருந்து அடிக்கடி வழங்கப்பட்டால், புழக்கத்தில் உள்ள ரூ.500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகையால் மக்கள் குழப்பமடைய தேவையில்லை. வழக்கம் போல் 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
June 04, 2025 11:45 AM IST

