திமுக அரசின் நில எடுப்புப் பணியால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாலைப் பணிகள் என்றாலும், புதிய கட்டடங்கள் என்றாலும் வளர்ச்சி திட்டங்கள் என்றாலும் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது தனியார் நிலங்களை அரசு சரியாகக் கையகப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
