Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`ஓபிஎஸ்-ஸை எக்காலத்திலும் அதிமுக-வில் இணைக்கப் போவதில்லை!' – ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 19, 2024
in அரசியல் செய்திகள்
0
`ஓபிஎஸ்-ஸை எக்காலத்திலும் அதிமுக-வில் இணைக்கப் போவதில்லை!' – ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஒற்றை சீட்டுக்காக இரட்டை இலையை எதிர்த்து ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார், இது எந்த விதத்தில் நியாயம்?” என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க திட்டமிட்டதாக எந்த ஆதாரமும் இல்லாமல் பத்திரிகைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில், அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு உள்ளதாகவும் கற்பனை கலந்த செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டாலும், இடம் பெறுவதில்லை

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு பிறகு தனக்கு பதவி பறி போகக் கூடாது என்பதற்காக கட்சியின் பிரிவுக்கு பல்வேறு வகையில் பிள்ளையார் சுழி போட்டார். ஜெயலலிதா உயிரைக் கொடுத்து உருவாக்கிய அரசை கலைக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவந்தபோது ஆதரவாக தன் எதிர்ப்பை சட்டசபையில் பதிவு செய்தார்.

கட்சிக்கு எதிராக பல்வேறு துரோகங்கள் செய்தாலும், ஒற்றுமை முக்கியம் என கருதி கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி, ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி வழங்கி, வீட்டு வசதி வாரியத்துறையை ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடியார் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்!

ஆனால் கட்சி முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்திலெல்லாம் மறுப்பும், மௌனத்தையும் அவர் கடைப்பிடித்ததால் கட்சியின் வளர்ச்சி பின்தங்கி இருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் தான் மட்டும் வெற்றி பெற்று மூன்று தொகுதிகளில் தோல்வியடையச் செய்தார். 2019 தேனி நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி என்பது அதிமுக-விற்கு சொந்தம்.

சட்டமன்றத்தில் இவர் பேசிய பேச்சுகள், மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர், அதிமுக கொள்கையிலிருந்து விலகியது போல் உள்ளது. அதிமுக என்றால் ஆன்ட்டி டி.எம்.கே என்ற நிலை உண்டு. ஏனென்றால் அப்படித்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்களை வளர்த்தார்கள். திமுக-வுக்கு எதிரான நிலையை எடப்பாடி பழனிசாமி எந்த நிலையிலும் பின்வாங்காமல் நெஞ்சுரத்துடன் தோலுரித்துக் காட்டி வருகிறார். ஆனால், அதை ஓ.பன்னீர்செல்வம் குழி தோண்டி புதைத்தார். இதனை தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

பொதுக்குழு கூடியபோது தலைமைக் கழகத்தை அடித்து நொறுக்கினார்கள். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் எத்தனை வழக்கு தொடுத்தார்.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், பன்னீர்செல்வத்திடம் ‘பேசி தீர்ப்பதை விட்டுவிட்டு வழக்கு போடலாமா?’ என்று அறிவுரை வழங்கினார்கள்.

இன்றைக்கு, மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஒற்றை சீட்டுக்காக இரட்டை இலையை எதிர்த்து ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார், இது எந்த விதத்தில் நியாயம்? எதற்காக இந்த பாவச் செயலை செய்கிறார்? ஆண்டவனுக்கே இது வெளிச்சம்.

ஆர்.பி.உதயகுமார் – ஓ.பி.எஸ்

தனக்கு பதவி, அதிகாரம், இல்லையென்றால் கட்சியை சின்னாபின்னபடுத்த எந்த நிலைக்கும் போவார். மீண்டும் பன்னீர்செல்வத்தை சேர்க்கும் விஷப் பரீட்சையை அதிமுக-வில் எந்த தொண்டரும் விரும்பவில்லை, தொண்டர்கள் விருப்பப்படி எடப்பாடியார் செய்து வருகிறார்.

இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் முதல் நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

நான்கரை ஆண்டுக்காலம் சிறப்பான ஆட்சியை செய்தார், இந்த ஆட்சி நான்கு நாள்கள் தாக்கு பிடிக்க முடியாது என்று சிலர் கற்பனை கலந்து செய்தியை வெளியிட்டார்கள். ஆனால் ஜெயலலிதாவின் புனித ஆட்சியை சிறப்பாக நடத்தி காட்டினார்.

அதிமுக-விற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பிரகாசமான வெற்றி உள்ளது. இந்த தேர்தலில் மகத்தான ஆதரவை அதிமுக-விற்கு மக்கள் அளித்துள்ளார்கள். இன்றைக்கு மத்திய மாநில அரசுகளின் சூழ்ச்சிகளை தாண்டி, துரோகத்தை தாண்டி நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். 40 தொகுதியிலும் 2 கோடி தொண்டர்கள் கடுமையாக உழைத்து சாதனை படைத்துள்ளார்கள். இன்றைக்கு மத்திய, மாநில அரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் உள்ளார். இதை மனசாட்சி உள்ளவர்கள் யாருமே மறக்க முடியாது.

நான் எடப்பாடியாரின் ஒப்புதலுடன் ஒரு செய்தியை சொல்கிறேன். எந்த காலத்திலும் பன்னீர்செல்வத்தை அதிமுக-வில் சேர்க்க மாட்டோம், அவர் சேர்கிறார் என்பதில் துளி அளவும் உண்மை இல்லை, எந்த ரகசிய கூட்டமும் நடைபெறவில்லை. இதை எடப்பாடியாரின் உத்தரவுடன் கூறுகிறேன்.

அதிமுக-வின் 50 ஆண்டுக்கால வரலாற்றில் பலமுறை பிளவு ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்துள்ளது. ஆனால், இந்தளவுக்கு வழக்குகளை சந்திக்க காரணம் ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநலம்தான்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

`100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?’ – தீயாகப் பரவிய தகவல்… விளக்கமளித்த மின்சார வாரியம்!



.

Previous Post

பாலிகனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

Next Post

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In