Last Updated:
Ranveer Allahbadia | ரன்வீர் அல்லாபாடியா என்பவர் நிகழ்ச்சியின்போது, பெற்றோரின் உடலுறவு பற்றி ஆபாசமான வகையில் பேசியிருந்தார்.
சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அளித்துள்ளது.
இந்தியாஸ் காட் லேட்டண்ட் என்ற நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் யூடியூபர் ஒருவர் பேசிய புதிய வீடியோவை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. சமய் ரெய்னா என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் இந்தியாஸ் காட் லேட்டண்ட் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அண்மையில் பிரபல யூடியூபர்கள், சமூக வலைதள பிரபலங்களை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
அப்போது ரன்வீர் அல்லாபாடியா என்பவர் நிகழ்ச்சியின்போது, பெற்றோரின் உடலுறவு பற்றி ஆபாசமான வகையில் பேசியிருந்தார். ரன்வீர் அல்லாபாடியாவின் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. பாஜக நிர்வாகிகள் சிலர் காவல்நிலையத்தில் அவர் மீது புகார்களையும் கொடுத்துள்ளனர்.
Also Read | அருவருக்கத்தக்க வகையில் அவதூறு பேச்சு.. 5 யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு
அசாம் மாநிலம் கவுகாத்தியில் சமய் ரெய்னா மற்றும் ரன்வீர் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்ச்சை பேச்சுக்கு ரன்வீர் பகிரங்க மன்னிப்பும் கேட்டார். இந்த நிலையில் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக சமய் ரெய்னாவின் யூடியூப் பக்கத்தின் மீது மத்திய அரசு புகார் அளித்தது. மத்திய அரசின் தலையீட்டை அடுத்து சர்ச்சைக்கு உள்ளான இந்தியாஸ் காட் லேட்டண்ட் என்ற நிகழ்ச்சியின் சமீபத்திய அத்தியாயத்தை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.
February 11, 2025 1:14 PM IST

