பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார்.
கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர், 145 பேர் 200க்கு 200க்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர்களையும் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கார்த்திகா(நாமக்கல்), அமலன் ஆன்டோ(அரியலூர்) ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளார்.
7.5% இடஒதுக்கீட்டில் தாரணி(கடலூர்), மைதிலி(சென்னை), முரளிதரன்(கடலூர்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெறும் என்றும் சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN Higher Education Minister Govi. Chezhian released the rank list for engineering course counselling
கூமாபட்டியிலிருந்து… விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!
