12-ம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை படித்திருந்தாலும், கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவை படிக்கலாம் என்பதைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
“கல்லூரிகளில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்தலாம், 12 ஆம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைப் படித்திருந்தாலும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் கல்லூரியில் விரும்பியப் பாடப் பிரிவில் சேரலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டிருக்கிறது. இந்த யோசனைகள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, இதன் பின்னணியில் நுழைவுத்தேர்வைத் திணிக்கும் திட்டம் தான் முதன்மையாக இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
