Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அன்புமணி! காணொலியில் ராமதாஸ்!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 8, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அன்புமணி! காணொலியில் ராமதாஸ்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான வழக்கில், தலைவர் அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், காணொலி வாயிலாக நீதிபதியிடம் பேசுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா? தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என்பதால், பாமகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை (ஆக. 9ஆம் தேதி) பாமக பொதுக்குழுவுக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருப்பதை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

நீதிபதியின் அழைப்பை ஏற்று, அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து நீதிபதி அறையில் அமர்ந்திருக்கிறார். தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ், நீதிமன்றத்துக்கு வர முடியாது என கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, காணொலி வாயிலாக ஆஜராக ஒப்புக் கொணடார் ராமதாஸ்.

இருவரிடமும் சமரசம் பேச நீதிபதி முயற்சி எடுத்திருக்கும் நிலையில், காணொலி வாயிலாக பேசும் வசதி உள்ள அறையில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணியிடம் நேரிலும் ராமதாஸிடம் காணொலியிலும் பேசவிருக்கிறார்.

இதையடுத்தே, நாளை அன்புமணி அழைப்பு விடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா என்பது தெரிய வரும்.

பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ராமதாஸ் – அன்புமணி இருவரும் நீதிபதி அறைக்கு நேரில் வர அழைப்பு விடுத்திருக்கிறார் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்.



.

Previous Post

stalin state education policy: வெறும் அலங்காரத்திற்காக மாநில கல்விக் கொள்கை என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக – Annamalai

Next Post

வாக்கு திருட்டு குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி 5 கேள்விகள் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாக்கு திருட்டு குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி 5 கேள்விகள் | இந்தியா

வாக்கு திருட்டு குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி 5 கேள்விகள் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In