முடிவுக்கு வரும் மோதல்?
உட்கட்சி பூசலுக்கு மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஏற்பாட்டின் பேரில், தைலாபுரம் இல்லத்துக்கு சென்ற அன்புமணி, ராமதாஸுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அவரை கட்சியின் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்படவேண்டும் என அறிவித்திருந்தார்.
மேலும், அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கிய நிலையில், நான்தான் கட்சியின் தலைவர் என்றும், நிர்வாகிகளை நீக்க தனக்கே உரிமை இருப்பதாகவும் அன்புமணி அறிவித்திருந்தார்.
இயற்கையைப் பாதுகாப்போம்!
உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
’நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி உருக்கம்
பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்த விராட் கோலி, “சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, முற்றிலும் உடைந்துவிட்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
திருப்பூர் பெண் பலி
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
உடுமலைபேட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளரின் மகள் காமாட்சி தேவி (வயது 27) என்பவர் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், ஆர்சிபி வீரர்களை காணும் ஆர்வத்தில் மைதானத்துக்கு சென்ற காமாட்சி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க…
