Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராமராஜ்யம் வரப்போகிறது… 2024 சுபிட்சமாக இருக்கும்.ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆரூடம்.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ராமராஜ்யம் வரப்போகிறது… 2024 சுபிட்சமாக இருக்கும்.ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆரூடம்.!
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“2024ம் ஆண்டு அனைவருக்கும் சுபிட்சமாக இருக்கும்’ என ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை வடிவ ராமர் சிலை  பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமான நிலையம்  திறக்கப்பட்டுள்ளது. அயோத்தி ரயில் நிலையம் பலகோடி செலவில்  மேம்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 2024 புத்தாண்டு பிறந்துள்ளதையொட்டி, ராம் லல்லாவுக்கு 56 வகை உணவுப் பொருட்களுடன் சிறப்பு ஆரத்தி, பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் செய்தியாளர்களிடம் பேசினார், ”ராம ராஜ்ஜியம் வரப்போகிறது. கோயில் கருவறையில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் துக்கம், வலி, பதற்றம் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

ராமர் கோயிலுக்குள் ஆச்சார்யா

ராமர் கோயிலுக்குள் ஆச்சார்யா

இந்த ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் வரும் 22ம் தேதி ராம் லல்லா கருவறையில் வீற்றிருக்கப் போகிறார். அதோடு, மக்களவை தேர்தலும் நடக்க உள்ளது. எனவே அனைத்தும் சுபிட்சமாக நன்றாக நடக்கும். அயோத்தியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. விமான நிலையம் வந்துள்ளது. புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் பாதை உருவாகியுள்ளது.

இதுபோன்ற பல சாலைகள், திட்டங்கள் மூலம் அயோத்தி பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். மக்கள் அனைவரும் வந்து தரிசனம் செய்யுங்கள். இது மிகவும் புனிதமான மாதம். அனைவருக்கும் என் ஆசிர்வாதம்” என அவர் கூறினார். 

Previous Post

அஸ்ஸாமில் லாரி- பேருந்து மோதி கோர விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம்

Next Post

வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த நாள் : நேதாஜி சுபாஷ் சேனை மரியாதை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த நாள் :  நேதாஜி சுபாஷ் சேனை மரியாதை..

வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த நாள் : நேதாஜி சுபாஷ் சேனை மரியாதை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In