மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, “தேர்தலில் நாங்கள் NDA கூட்டணியின் கீழ் போட்டியிடுகிறோம். அதிமுக-வில் இருந்து முதல்வர் வேட்பாளர் வருவார்” என்று எடப்பாடியின் பெயரைக் குறிப்பிடாமல் அமித்ஷா பேசியிருந்தார்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று (ஜூன் 27) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அமித்ஷாவின் இந்தப் பேச்சுக் குறித்து கேள்வி எழுப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “NDA கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு தலைவர் எடப்பாடிதான். NDA கூட்டணியின் பிரிகேடியர் கட்டளை தலைவர் எடப்பாடியார்தான்.
