இதனால், செவ்வாய்க்கிழமை (செப். 23) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி, கோயம்புத்தூரின் மலைப்பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
