
பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல்காந்தி எம்.பி., கடந்த 2022ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை குமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டார்.
இம்மாதம் 7ம் தேதி, அந்த நடைபயணம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக விழிப்புணர்வு பிரசார இயக்கமும், நடைபயணமும் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் கேட்டுக்கொண்டார்கள்.
அதன்படி அந்த வெற்றி யாத்திரை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், மத்திய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையிலும் விழிப்புணர்வு பிரச்சார இயக்க நடைபயணம் 07.09.2023 அன்று கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் இருந்து களக்காடு காந்தி சிலை வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான திரு.நாங்குநேரி ரூபி ஆர்.மனோகரன் எம் எல் ஏ அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

