வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: 3 மாநில தேர்தல் தோல்விகளை ஏற்பதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், அங்கு கொள்கை ரீதியிலான போராட்டம் தொடரும் எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ம.பி., சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். கொள்கை ரீதியிலான போராட்டம் தொடரும்.
தெலுங்கானா மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். கடினமாக உழைத்து ஆதரவு தெரிவித்த தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; தெலுங்கானா மக்கள் அளித்த உத்தரவுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதேபோல், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தானில் எங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இந்த 3 மாநிலங்களிலும் எங்களின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரத்தில், இந்த மூன்று மாநிலங்களிலும் கட்சியை மீண்டும் கட்டி எழுப்பவும், புத்துயிர் பெற செய்யவும் உறுதியாக உள்ளோம். தற்காலிகமாக ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீண்டு வந்து, ‛இண்டியா’ கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வோம் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

