இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பல தசாப்தங்களாக மனிதாபிமான – அறிவியல்பூர்வ அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கையில் இருந்து ஒருபடி பின்நோக்கிச் செல்வதாகும்.
இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்க வேண்டிய பிரச்னை அல்ல. தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகிய நடவடிக்கைகள் தெருக்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வை கொண்டது, இரக்கமற்றது.
பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்குகளின் நலனும் ஒன்றிணைந்து செயல்படுவதை நாம் உறுதி செய்ய முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
