Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லட்டு கலப்பட விவகாரம் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்: ராகுல் காந்தி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சுரான்கோட்: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், சுரான்கோட் பகுதியில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை இந்தியா கூட்டணி சிதைத்துள்ளது.

மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. நாட்டின் வரலாற்றிலேயே ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது இதுவே முதல் முறை. மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசு தவறினால் மாநில அந்தஸ்தை வழங்குமாறு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும்.

தற்போது தில்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் ஆளப்படுகிறது. இது தொடர்பான முடிவுகள் வெளியூர்வாசிகளால் எடுக்கப்படுகிறது. மக்களை மதம், ஜாதி, இனம் மற்றும் பிராந்திய அடிப்படையில் பிரிப்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் வெறுப்பைப் பரப்பி வருகின்றன. வெறுப்புச் சந்தையில் அவற்றை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி அன்புக்கான கடைகளைத் திறந்துள்ளது என்றார்.

ஜம்மு-காஷ்மீரின் ஜைனாகோட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரச்னைகளை நான் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். இந்தப் பிரசார மேடையில் இருந்து சற்று தூரத்தில் ஹெச்எம்டி கடிகாரத் தொழிற்சாலை இருந்தது. அது மூடப்பட்டு விட்டது. நாடு முழுவதும் இதுபோன்ற தொழிற்சாலைகளை பாஜக மூடிவிட்டது.



.

Previous Post

பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி… காசா குறித்துப் பேசியது என்ன? | Modi meets Palestinian president, reiterates India’s support for ‘two-state solution’

Next Post

Sri Lanka: அனுரா பதவியேற்பு; அடுத்து நடக்கப் போகும் அதிரடி மாற்றம்! – ‪IPS team with Chandru Vlogs

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sri Lanka: அனுரா பதவியேற்பு; அடுத்து நடக்கப் போகும் அதிரடி மாற்றம்! – ‪IPS team with Chandru Vlogs

Sri Lanka: அனுரா பதவியேற்பு; அடுத்து நடக்கப் போகும் அதிரடி மாற்றம்! - ‪IPS team with Chandru Vlogs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In