விரைவில் திருமணம் செய்துகொள்வதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உத்தர பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரலி தொகுதியில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது கூட்டத்தில் பொதுமக்கள் எழுப்பிய முழக்கத்துக்கு செவி சாய்த்தார். எப்போது திருமணம் என்று கூட்டத்தில் இருந்த சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:
எம்.எல்.ஏ. கன்னத்தில் பளார் விட்ட எதிர்க் கட்சி தொண்டர்… ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது பரபரப்பு
53 வயதாகும் ராகுல்காந்தி இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, தனக்கு கட்சி வேலைகள் அதிகம் இருப்பதாகவும், திருமணத்துக்கு இடமில்லை என்றும் பேசியிருந்தார்.
.
- First Published :

