மக்களவையில் நீட் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
நீட் முறைகேடு குறித்து பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் பலர் மனு அளித்திருந்தனர். நீட் முறைகேடு தொடர்பாக உடனே விவாதம் நடத்த மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், குடியரசுத் தலைவர் தீர்மானத்தை ஒத்திவைக்கக் கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மக்களவையில் ராகுல் காந்தி பேசும்போது அவரது மைக் அணைக்கப்பட்டதாக, காங்கிரஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு மக்களவையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதலளித்து பேசுகையில், உறுப்பினர்களின் மைக்கை நான் அணைப்பதில்லை எனவும், அத்தைகைய உரிமை எனக்கு இல்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
மேலும், ‘நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை தொடர்பான விவாதமே நடைபெற வேண்டும். பிற விஷயங்கள் பதிவுசெய்யப்படமாட்டாது,’ என்று பிர்லா கூறினார்.

🤣🤣🤣🤣👌