Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஹைட்ரஜன் குண்டு என்ற ராகுல்காந்தியின் கூற்று முட்டாள்தனமானது” பாஜகவினர் கண்டனம்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2025
in அரசியல் செய்திகள்
0
“ஹைட்ரஜன் குண்டு என்ற ராகுல்காந்தியின் கூற்று முட்டாள்தனமானது” பாஜகவினர் கண்டனம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டுமுறை பதிவு பெற்றுள்ளவர்கள், மாநிலத்தைவிட்டு வெளியேறிவிட்டவர்கள், இந்தியர் என்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், வாக்களிக்க தகுதி பெற்றவர்களை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாகவும், பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டின. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி பிஹாரின் சாசராமில் விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார்.

இதன் இறுதி நிகழ்ச்சி தலைநகர் பாட்னாவில் இன்று (செப்.1) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பாஜகவினருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அணுகுண்டைவிட பெரிய ஒன்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, நீங்கள் தயாராக இருங்கள். ஒரு ஹைட்ரஜன் குண்டு வர இருக்கிறது. விரைவில் வாக்குத் திருட்டின் உண்மையை மக்கள் கண்டுபிடிப்பார்கள். அப்போது, பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் தனது முகத்தை காட்ட முடியாது. இது உறுதி. என தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தியின் கூற்று நாட்டு மக்களை அவமதிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும், “ராகுல் காந்தி அரசியலமைப்பையோ அல்லது சட்டத்தையோ புரிந்து கொள்ளவில்லை. 2014 முதல், மோடியின் அனைத்து வெற்றிகளும் போலியானவை என்று அவர் கூறி வருகிறார் – இது இந்த நாட்டின் மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் ஒரு அவமானம். அவர் ஒரு வெடிகுண்டைக் கொண்டுவருவது பற்றிப் பேசுகிறார், ஆனால் அது ஒரு முட்டாள்தனமாக மாறிவிடும். ராகுல் காந்தியின் அறிக்கைகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்,” என்று பிரசாத் மேலும் கூறினார்.

அதே போல், பாஜக தலைவரும் டெல்லி அமைச்சருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா ஹைட்ரஜன் குண்டு இப்படித்தான் இருக்குமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் தோற்றார்கள் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் , மக்கள் முன் தோல்வியை ஏற்றுக்கொண்டு – ‘ஆம், நீங்கள் எங்களை தோற்கடித்தீர்கள், எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் கடினமாக உழைத்து மீண்டும் உங்களிடம் வருவோம்’ என்று கூறுவதுதான் சரியானது. ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் நீதிமன்றங்களை இதில் இழுக்க விரும்புகிறார்கள். கர்நாடகாவில் வாக்கு மோசடி நடந்திருந்தால், உங்கள் அரசாங்கம் அங்கு எவ்வாறு ஆட்சிக்கு வந்தது? இமாச்சலத்தில் அவர்கள் எவ்வாறு அரசாங்கத்தை அமைத்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

“Rahul Gandhi’s new fairytale – ‘vote chori’! 🤦‍♂️

After his failed attempt on his vote chori allegations, which was debunked and exposed CONgress for the fake claims, yet again Attention chori, Rahul Gandhi chooses to not learn from earlier mistakes. The Election Commission of… pic.twitter.com/TJdQa46yET


— Pralhad Joshi (@JoshiPralhad) September 18, 2025

தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்த, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தனது வாக்குச் சோரி குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், ராகுல் காந்தி தனது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளத் தேர்வு செய்யவில்லை என்றும், அவரது சமீபத்திய கூற்றுகள் சிரிக்கத்தக்கவையாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் வென்ற கர்நாடகாவின் மாலூர் தொகுதியை, முறைகேடுகள் காரணமாக கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையும், மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேற்கோள் காட்டும் ஆலண்ட் உதாரணம் கர்நாடகாவில் உள்ளது, அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, மேலும் வாக்காளர்கள் ஆன்லைனில் நீக்கப்பட்டனர் என்ற கூற்று நகைப்புக்குரியதாக இருக்கிறது. ராகுலுக்கு தேர்தல் செயல்முறை பற்றி தெரியாது, காலம். வாக்காளர்களை ஆன்லைனில் நீக்க முடியாது என்பது அவருக்குத் தெரியாதா? கர்நாடகாவில் உள்ள மாலூர் சட்டமன்றத் தொகுதி பற்றி அவர் ஏன் பேசவில்லை என வினவினார்.

மகாராஷ்டிரா அமைச்சரும் சிவசேனா தலைவருமான யோகேஷ் கடம், ராகுல் காந்தியின் “ஹைட்ரஜன் குண்டு” கூற்றுக்களை கடுமையாக சாடினார். மேலும் காங்கிரஸ் தலைவர் சமீபத்திய தேர்தல்களில் தனது தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை என்றும், அதனால்தான் இந்த போலி வாக்குச் சோரி குற்றச்சாட்டுகளை வெளியிட்டதாகவும் கூறினார்.

மேலும், அவர் நம் நாட்டு மக்களை அவமதிக்கிறார். வரவிருக்கும் பீகார் தேர்தலை மனதில் கொண்டு இதையெல்லாம் செய்கிறார். ஆனால், அவர் இதைத் தொடர்ந்து செய்தால், பீகாரிலும் அவர் தேர்தல்களில் தோல்வியடைவார் என தெரிவித்துள்ளார்.

பாஜகவின் விமர்சனத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி தாரிக் அன்வர், ராகுல் காந்தியின் வாக்கு மோசடி தொடர்பான கூற்றுக்களை ஆதரித்து, “தேர்தல் ஆணையம் ஏதாவது செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி, நிச்சயமாக சில முறைகேடுகள் நடந்துள்ளன” என்று கூறினார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 19, 2025 10:45 AM IST



.

Previous Post

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்

Next Post

வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In