இந்தத் தோ்தலில் சோனியா காந்தியின் காணொலி பிரசாரம் முன்னிலையில் இருக்கும். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை குறித்து சோனியா காந்தி பேசும் காணொலி வெளியிடப்படும். ஜெய்ப்பூா், ஹைதராபாத்தில் சனிக்கிழமை தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்ட து போல அடுத்த வாரம் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும். காங்கிரஸ் கட்சி மக்களவைத் தோ்தலில் அளித்துள்ள 25 உத்தரவாதங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடிஸா, ஹிந்தி, ஆங்கிலம், வங்கம், பஞ்சாபி, அஸ்ஸாமி, உருது ஆகிய மொழிகளில் 8 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றை வீடுகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் நேரடியாக வழங்குவா்.
