கேரள மாநிலத்தின் வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிகட்ட பிரசாரம் நேற்று (நவ.11) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், சி.பி.ஐ வேட்பாளர் சத்யன் மொக்கேரி ஆகியோர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மேளதாளங்கள் முழங்க கலாசக்கொட்டு எனப்படும் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரியங்காவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி இறுதிகட்ட பிரசாரத்துக்கு வந்திருந்தார். ஐ லவ் வயநாடு என்ற டீ சர்ட் அணிந்து ராகுல் பிரசாரத்தில் கலந்துகொண்டார்.
பத்தேரியில் நடந்த இறுதிகட்ட பிரசாரத்தில் நவ்யா ஹரிதாஸை பொக்லைன் இயந்திரத்தில் உயரமாக நிற்க வைத்து பிரசாரம் மேற்கொண்டனர். இறுதிகட்ட பிரசாரத்தில் பேசிய நவ்யா ஹரிதாஸ், “வயநாட்டின் நிலைமை மாறியுள்ளது. பா.ஜ.க-வுக்கு ஆதரவு நிலையை மக்கள் கையில் எடுத்துள்ளனர்” என்றார்.
