இந்த நிலையில், கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் பாா்வையிட பிரதமா் நரேந்திர மோடி ,‘கேரள மாநிலம், கண்ணூருக்கு சனிக்கிழமை காலை 11 மணியளவில் வந்தடைகிறார். பின்னா் அங்கிருந்து வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை வான்வழியாகப் பாா்வையிடுகிறாா். நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளாா்.
வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வுப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்திலும் அவா் பங்கேற்கவுள்ளாா்.
இந்த நிலையில், வயநாடு செல்லும் பிரதமர் மோடி வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட கடுமையான இயற்கை பேரழிவுகளை நேரில் பாா்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பாா்வையிடுவதற்காக சனிக்கிழமை அங்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இதுவொரு நல்ல முடிவு.
பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று நம்புவதாக ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கான விரிவான தொகுப்புக்கு ஒப்புதல் அளிப்பதிலும் பிரதமரின் வருகை முக்கியமானதாக இருக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி ஒரு வெத்து வேட்டு. எனவே அவருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை