பீகாரில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த விகாஷீல் இன்சான் கட்சியின் நிறுவனர் முகேஷ் சாஹ்னியின் தந்தை ஜித்தன் சாஹ்னி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது,
விகாஷீல் இன்சான் கட்சியின் நிறுவனரும், பிகாரின் முன்னாள் அமைச்சருமான முகேஷ் சாஹ்னியின் தந்தையுமான ஸ்ரீ ஜித்தன் சாஹ்னி கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
முகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பிகார் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி சாஹ்னி குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

❤️❤️❤️❤️❤️❤️❤️👺👺👺👺👺👺👺👺👺