புதுடில்லி: புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு முயற்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என காங்.,எம்.பி ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட , உயிரிழப்புகள் குறித்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழகம், ஆந்திரா, ஒடிசாவில் அரசின் நிவாரண பணி, மீட்பு முயற்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உதவ வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

