மாஸ்கோ: ‛‛ அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராகவே உள்ளது” என அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: அணு ஆயுதப் போர் துவங்குவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் அந்த போருக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
ரஷ்ய மண்ணிலோ அல்லது உக்ரைன் மண்ணிலோ தங்களது நாட்டு ராணுவத்தை அனுப்பினால், அதனை தலையீடு என்று தான் நாங்கள் கருதுவோம் என்பது அமெரிக்காவிற்கு புரியும். இவ்வாறு புடின் கூறினார்.


வல்லரசு என்று சொல்லும் ரஷ்யாவால் மிகச்சிறிய நாடாண உக்கிரனை எதுவுமே செய்ய இயலவில்லை முதலில் அங்கு அங்கு வெற்றி பெறட்டும். பின்பு ரஷ்ய அதிபர் புதின் உலறுவதற்கு பதில் சொல்லலாம்