Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Putin – Kim: 'ஷி, புதின், கிம் சந்திப்பு' – அமெரிக்காவுக்குச் சொல்லவரும் செய்தி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2025
in அரசியல் செய்திகள்
0
Putin – Kim: 'ஷி, புதின், கிம் சந்திப்பு' – அமெரிக்காவுக்குச் சொல்லவரும் செய்தி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பெய்ஜிங்கில் ஒரு வரலாற்றுச் சந்திப்பு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்காவுக்கு முதல் இடம்” என்ற தனது கொள்கையின் கீழ் உலக வர்த்தக அமைப்பையே உலுக்கி வருகிறார். அவரது வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள், பல நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன.

குறிப்பாக, சீனா, இந்தியா, மெக்சிகோ, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த வரிவிதிப்புகளால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில்தான், அமெரிக்காவின் நீண்டகால எதிரிகளான மூன்று நாடுகள், ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி, உலக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த ஆயத்தமாகி வருகின்றன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகிய மூவரும் சீனாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்தச் சந்திப்பை சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம், வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA உறுதிப்படுத்திருக்கிறது. மேலும், ரஷ்ய அதிபர் புதினின் சீனா செல்வதை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பானது என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பு, இரண்டாம் உலகப் போரின் 80-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ராணுவ அணிவகுப்பில் நடைபெற உள்ளது. மேலும் இதில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஆனால் இது வெறும் ராணுவக் கொண்டாட்டம் மட்டுமல்ல, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஒரு மூவர் கூட்டணியின் தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்தத் தலைவர்கள், “நீங்கள் எங்களைத் தனிமைப்படுத்த நினைத்தால், நாங்கள் ஒன்றுபட்டு நிற்போம்” என ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்ல விரும்புகின்றனர்.

ஒவ்வொரு தலைவருக்கும் என்ன லாபம்?

இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், “உக்ரைன் போரில் சிக்கித் தவிக்கும் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தேவைப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள புதின், இந்தச் சந்திப்பின் மூலம் வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களையும், சீனாவிடமிருந்து பொருளாதார ஆதரவையும் பெறுவதன் மூலம், ட்ரம்பின் அழுத்தங்களைச் சமாளிக்கலாம் என நம்புகிறார்.

ரஷ்யா - உக்ரைன் போர்|புதின் - ஜெலன்ஸ்கி
ரஷ்யா – உக்ரைன் போர்|புதின் – ஜெலன்ஸ்கி

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் சீனா, இந்தச் சந்திப்பின் மூலம் தன்னை ஒரு சக்திவாய்ந்த தலைவராகக் காட்டிக்கொள்ள முயல்கிறது. தைவான் மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா மற்றும் வட கொரியாவின் ஆதரவை நாடி, அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கத் திட்டமிடுகிறது. மேலும், ரஷ்யாவிடமிருந்து மலிவான எரிசக்தி ஆதாரங்களைப் பெறுவதும் சீனாவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

Trump: புடினின் இழுத்தடிக்கும் தந்திரம்; நெருங்கியும் நெருங்காத ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம் – இனி?

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளால் வட கொரியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் மூலம், கிம் ஜாங் உன் ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து அணுசக்தி தொழில்நுட்பம், மூலப்பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகளைப் பெறலாம் என நம்புகிறார். உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தனக்கு ஒரு ராஜதந்திர அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும்” என்றனர்.

அமெரிக்கா
அமெரிக்கா

அமெரிக்காவுக்கு ஏற்படும் பாதிப்புகள்

தொடர்ந்து பேசிய விவரப்புள்ளிகள், “இந்தச் சந்திப்பு, உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குப் பெரிய சவாலை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகளை அமெரிக்கா “அமைதியைச் சீர்குலைக்கும் நாடுகள்” என்று அழைக்கிறது. இந்த மூன்று நாடுகளும் தங்களுக்குள் ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன.

இது பனிப்போர் காலத்து எதிர்ப்பை மீண்டும் நினைவூட்டி, அமெரிக்காவிற்கு ஒரு புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும். ரஷ்யா வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவது, உக்ரைன் போரை நீட்டிக்கக்கூடும். இதனால் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் நிதி மற்றும் ராணுவ உதவிகளின் மீதான அழுத்தம் அதிகரிக்கும்.

வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகும். இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு, உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலப்பரப்பில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

இது அமெரிக்காவை, அதன் நீண்டகால எதிரிகளான ரஷ்யா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியோருடன் ஒரே நேரத்தில் பல முனைகளில் மோத வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளுகிறது. ட்ரம்பின் அதீத வரிவிதிப்பு, தனது எதிரிகளை மேலும் பலப்படுத்துகிறது என்பதையே இந்தச் சந்திப்பு உணர்த்துகிறது” என்றனர்.

“நண்பர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்”- இந்தியாவைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



.

Previous Post

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

Next Post

இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்பல்கள் செல்லத் தடை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்பல்கள் செல்லத் தடை!

இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்பல்கள் செல்லத் தடை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In