
1978 ஆம் ஆண்டில் புரி ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறையில் 747 வகையான நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 454 வகையான தங்க ஆபரணங்கள் இருந்தன. அதன் எடை மட்டும் 12,838 கிராம். அதேசமயம் 22,153 கிராம் எடையுள்ள 239 வகையான வெள்ளி நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒடிசா ரிவ்யூ இதழில் வெளியான செய்தியின்படி, பொக்கிஷ அறையின் உள் அறையில் 180 வகையான விலையுயர்ந்த நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் முத்து ஆகியவற்றால் செய்யப்பட்டவை. இதில் பல நகைகளின் எடை 1.25 கிலோ வரை இருந்தது.

❤️❤️❤️❤️❤️