Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புதுச்சேரியில் மீண்டும் உயர்கிறது மின் கட்டணம் வீடுகளுக்கு யூனிட்டுக்கு 75 பைசா உயர்த்த திட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புதுச்சேரியில் மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்  வீடுகளுக்கு யூனிட்டுக்கு 75 பைசா உயர்த்த திட்டம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுச்சேரி மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, 2023-24 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய, இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க கவர்னர் ஒப்புதல் தந்தார்.

இதையடுத்து, மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்துள்ளது. அதன்படி, வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசு முதல் 75 காசு வரை உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ. 6.35ல் இருந்து ரூ. 7 ஆக உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.45ல் இருந்து ரூ. 6 ஆகவும், அதி உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.6 ஆகவும் உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் தொடர்பாக ஆய்வு செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் புதுச்சேரி வருகிறது. பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, அதற்கு பிறகு மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள். இந்த மின்கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரும்.

புதுச்சேரி மின்துறை உயர்த்தி கேட்கும் மின் கட்டணமே புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்படுவது தொடர்கிறது.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மின் கட்டணம் புதுச்சேரியில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனியாருக்கு மின்துறையை தாரை வார்க்க நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட உள்ளது.

புதுச்சேரி மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, 2023-24


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

நிகழாண்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய இந்திய பாரம்பரிய மருத்துவம்: ஆயுஷ் அமைச்சகம் 

Next Post

2040-க்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவா்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2040-க்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவா்

2040-க்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவா்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In