Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் சி.பி.ஆர்… அம்பாசிடர் காரில் நகர்வலம் – காரணம் என்ன? | Puducherry CM Rangasamy and Governor Radhakrishnan went together in the same car

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 29, 2024
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் சி.பி.ஆர்… அம்பாசிடர் காரில் நகர்வலம் – காரணம் என்ன? | Puducherry CM Rangasamy and Governor Radhakrishnan went together in the same car
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கஞ்சா புழக்கம், அரசுத் துறைகள் மற்றும் நிதிகளில் நடக்கும் முறைகேடுகள் என புதுச்சேரியில் நிலவி வரும் பிரதான பிரச்னைகள் குறித்துதான் ஆளுநர் பேசினார் என்றாலும், ஆட்சியாளர்கள் தரப்பில் அதை விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னால் முதல்வர் நாராயணசாமி, “கிரண்பேடி, தமிழிசையைப் போலத்தான் தற்போதைய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் செயல்படுகிறார். ஆளுநர், அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு, முதல்வர், அமைச்சர்கள் மீது கவனம் செலுத்தாமல், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அதிகாரிகளை வைத்து கூட்டம் போடுகிறார். அரசுத் துறைகளில் அவருக்கு கருத்து இருந்தால்,  முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பலாம். ஆனால் அரசில் நேரடியாக தலையிடக் கூடாது. ஆனால் ஆளுநர் சில விஷயங்களில் தலையிட்டிருக்கிறார். அது வரவேற்கக் கூடியதுதான். குறிப்பாக கஞ்சா விற்பனை மூன்று மாதங்களில் ஒழிக்கப்படும் என்பதிலும், குப்பை அள்ளும் விவகாரத்தில் தலையிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது” என்றார்.

முதல்வர் ரங்கசாமியுடன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்முதல்வர் ரங்கசாமியுடன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

முதல்வர் ரங்கசாமியுடன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்த சூழலில்தான் ஆளுநரும், முதல்வரும் ஒன்றாக ஒரே காரில் நகர்வலம் சென்றிருப்பது, கவனிக்க வைத்திருக்கிறது. எம்.எல்.ஏ, அமைச்சராக இருந்து தற்போது நான்காவது முறையாக முதலமைச்சராக இருக்கும் ரங்கசாமி, யமஹா பிரியர். தன்னுடைய இளமைக் காலத்தில் அவர் வாங்கிய யமஹா ஆர்.எக்ஸ் 100  பைக்கை இன்னும் பராமரித்து வைத்திருக்கிறார். அனைத்து தேர்தல்களிலும், அந்த பைக்கில் சென்று வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல 1997-ம் ஆண்டு அவர் முதன் முதலில் வாங்கிய அம்பாசிடர் காரை, சமீபத்தில் புதுப்பித்து அதில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அந்த காரில்தான் முதல்வர் ரங்கசாமியும், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் நேற்று மாலை நகர்வலம் சென்றனர். நகரின் பிரதான வீதிகளான காந்தி வீதி, நேரு வீதி, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை வழியாக கடற்கரை சாலை சென்ற அவர்கள், ஆளுநர் மாளிகை வந்தனர். `கிரண்பேடி, தமிழிசை வழியில் தற்போதைய ஆளுநருக்கும், முதல்வருக்கும் மோதல் என்று எதிர்க்கட்சிகளும், மக்களும் பேச ஆரம்பித்துவிட்டனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இந்த நகர்வலம்’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

Indian vs Chinese troops tug of war: இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே கயிறு இழுத்தல் போட்டி-வென்றது யார் தெரியுமா?

Next Post

புஷ்பா – 2 இரண்டாவது பாடல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புஷ்பா – 2 இரண்டாவது பாடல்!

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In