Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Puducherry: 8 மணி நேரம் `ரோடு ஷோ’… தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன ?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 27, 2025
in அரசியல் செய்திகள்
0
Puducherry: 8 மணி நேரம் `ரோடு ஷோ’… தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன ?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கரூரில் அவர் நடத்திய ரோடு ஷோவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்காக த.வெ.க தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று குற்றம் சுமத்தி, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்திருந்தார்.

புதுச்சேரி

புதுச்சேரி

இந்த நிலையில்தான் த.வெ.க தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக அந்தக் கட்சியினர் அனுமதி கேட்டு புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர்.

அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாக சென்று மக்களை சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



.

Previous Post

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்! | admk ex minister sengottaiyan resign mla post

Next Post

“விரைவில் எங்களின் அமுமுக கூட்டணி குறித்து முடிவெடுப்போம்” – டிடிவி தினகரன் | It will be known in a few days whether Sengottaiyan will join Vijay’s TVK party.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்" – டிடிவி தினகரன்

"விரைவில் எங்களின் அமுமுக கூட்டணி குறித்து முடிவெடுப்போம்" - டிடிவி தினகரன் | It will be known in a few days whether Sengottaiyan will join Vijay's TVK party.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In