Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ட்ரோன்களைப் பயன்படுத்தி போர் நடவடிக்கை.. பயிற்சித் திட்டங்களைப் புதுமைப்படுத்தியது பி.எஸ்.எஃப். | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2025
in அரசியல் செய்திகள்
0
ட்ரோன்களைப் பயன்படுத்தி போர் நடவடிக்கை.. பயிற்சித் திட்டங்களைப் புதுமைப்படுத்தியது பி.எஸ்.எஃப். | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 21, 2025 3:54 PM IST

அடுத்து சந்தைக்கு வரக்கூடிய ட்ரோன்களில் உள்ள தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து பாதுகாப்புப் படையினர் பயிற்சி பெறுவார்கள்

எல்லை பாதுகாப்பு படைஎல்லை பாதுகாப்பு படை
எல்லை பாதுகாப்பு படை

ட்ரோன்கள் மூலமாகக் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் முறைகளைச் செயல்படுத்துவது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையில் சிறப்பு மற்றும் கூடுதல் பயிற்சித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நவீன போர் யுக்திகளைக் கையாளும் வகையில் இந்தத் திட்டம் எல்லைப் பாதுகாப்படையின் இணைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய எல்லைப் பகுதியில் பெரும்பான்மையான இடங்களை பி.எஸ்.எஃப் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாத்து வருகிறார்கள்.

இவர்கள் துணை இராணுவத்தினர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்தியாவுக்கு எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் பாகிஸ்தான், சீனா, நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா உளவு விமானங்கள் மூலமாக எதிரிகள் கண்காணிப்பு மற்றும் தாக்குதலை நடத்தக்கூடிய அபாயம் உள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

குறிப்பாக ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலமாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்துதல் நடந்துள்ளது. இதே போன்று பஞ்சாப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் பாகிஸ்தான் போதை பொருட்களை ஆளில்லா உளவு விமானங்கள் மூலமாகக் கடத்தி உள்ளது. இந் நிலையில் ஆளில்லா உளவு விமானங்களின் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் போர் முறை என்ற புதிய பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் பயிற்சி பெறும் வீரர்கள் ட்ரோன்களைக் கண்டறிந்து, அடையாளம் கண்டு, தடுத்து நிறுத்துவதில் நிபுணத்துவம் பெறுவார்கள். இது எல்லைப் பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய ரயில்வேயின் அதிக வருவாய் ஈட்டும் முதல் 5 ரயில் நிலையங்கள்… சென்னைக்கு எந்த இடம்…?

மேலும் எல்லைப் பாதுகாப்புப் படையின் மேம்பாட்டுக்காக ட்ரோன்கள் குறித்த ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தில் நவீன ட்ரோன்கள், அடுத்து சந்தைக்கு வரக்கூடிய ட்ரோன்களில் உள்ள தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து பாதுகாப்புப் படையினர் பயிற்சி பெறுவார்கள். இதன் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படை நடவடிக்கை கூடுதலாக மேம்படுத்தப்படும்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 21, 2025 3:54 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ட்ரோன்களைப் பயன்படுத்தி போர் நடவடிக்கை.. பயிற்சித் திட்டங்களைப் புதுமைப்படுத்தியது பி.எஸ்.எஃப்.



.

Previous Post

ஆக்கபூர்வ சீர்திருத்தம்!

Next Post

தமிழகத்தில் செப்.24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் செப்.24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் செப்.24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In