Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.! கொட்டும் மழையில் சரத் பவார் தலைமையில் போராட்டம்.!!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 24, 2024
in Default
1
2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.! கொட்டும் மழையில் சரத் பவார் தலைமையில் போராட்டம்.!!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மூத்த தலைவர் சரத் பவார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இரு சிறுமிகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடமும், பத்லாப்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். 

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து 17ம் தேதி பத்லாபூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்று போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்த மகாராஷ்டிர அரசு, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. பள்ளிச் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்வத்தை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மகாராஷ்டிர எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் புனேவில் இன்று போராட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் கருப்புத் துணிகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது என்று சரத் பவார்  தெரிவித்தார்.

Previous Post

திருமாவளவன் குறித்து சாதிரீதியாகஅவதூறு கருத்து: நாதக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.

Next Post

சீரமைக்காமல் பூட்டியே கிடக்கும் ராமாபுரம் சிறுவர் பூங்கா – கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
சீரமைக்காமல் பூட்டியே கிடக்கும் ராமாபுரம் சிறுவர் பூங்கா – கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

சீரமைக்காமல் பூட்டியே கிடக்கும் ராமாபுரம் சிறுவர் பூங்கா - கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In