செய்தி நிறுவனமான M/s ANI மீடியா மூலம் வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் அளித்த நபருக்கு வழங்கப்படும் வெகுமதியின் அளவு குறித்து புதிய முடிவை எடுக்குமாறு “தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி” கொள்கையின் கீழ் நிதி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வெகுமதிக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
சேவை வரி ஏய்ப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தவர் தனக்கு தன்குந்த வெகுமதி அரசு நிர்ணயித்துள்ளபடி வழங்கவில்லை என்று வாதிட்டார்.
M/s ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) மீடியா பிரைவேட் லிமிடெட் ரூ. 2.59 கோடி வரி முறைகேடு செய்ததை மேல்முறையீடு செய்தவர் தகவலைக் கொடுத்தவுடன் தானாக முன்வந்து சேவை வரி செலுத்த வேண்டிய ரூ. 2.59 கோடியை செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது..
வரி ஏய்ப்பு பற்றிய தகவலின் அடிப்படையில் மேல்முறையீட்டாளருக்கு இறுதி வெகுமதியாக ரூ.5.50 லட்சத்தை வெகுமதி குழு அனுமதித்தது. மேல்முறையீடு செய்தவர் மேற்கண்ட சட்டத்தின் 4.1வது பிரிவின் அடிப்படையில் ரூ.51.80 லட்சம் வெகுமதியைப் பெறத் தகுதியுடையவர் எனக் கூறியுள்ளார். ஆக இந்த பிரச்னையை தீர்க்க உச்ச நீதிமன்றம் நிதி அமைச்சகத்தை சரிசெய்ய கூறியுள்ளது.

