கோப்புப் படம்.
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக பொறுப்புகளில் மாற்றம் செய்து பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அவினாஷ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியில் பிரியங்கா காந்தி தொடர்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமார் கூடுதலாக கவனிப்பார் என்றும் ஆந்திரம், அந்தமான் நிகோபர் பகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில் சத்தீஸ்கருக்கு சச்சின் பைலட், குஜராத்திற்கு முகுல் வாஸ்னிக் பொதுச்செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

