வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது.
‛மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தன. அங்கு, மத்திய குழு வந்து ஆய்வு நடத்தியது. இதனை தொடர்ந்து, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களும் பெருமழை மற்றும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிப்பை சந்தித்தன. இங்கும் மத்திய குழுவினர் உடனடியாக வந்து ஆய்வு நடத்தினர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் டிச., 26ம் தேதி தூத்துக்குடியில் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில், தமிழக வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தில் உயர்நிலை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், வெள்ளத்திற்கு பிந்தைய நிலவரம், நிவாரண பணிகள், உதவிகள் வழங்குவது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மறுசீரமைப்பு பணிகள், நிவாரணம் குறித்து தமிழக அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

