புதுடில்லி : உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக துபாய் செல்ல உள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதாவது: காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு வரும் 28 ம் தேதி முதல் துவங்கி டிச., 12-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி வரும் 30 ம் தேதி மற்றும் டிச., 1 ஆகிய இருநாட்கள் துபாய்க்கு பயணிக்கிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரையும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

