Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளில் நடந்த முக்கிய உலக அரசியல் நகர்வு! அமெரிக்கா வரியை குறைக்கிறதா? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2025
in அரசியல் செய்திகள்
0
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளில் நடந்த முக்கிய உலக அரசியல் நகர்வு! அமெரிக்கா வரியை குறைக்கிறதா? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 17, 2025 9:51 PM IST

இந்தியா மீதான வரியைக் குறைப்பது குறித்து டிரம்ப் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

News18News18
News18

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே மீண்டும் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பல்வேறு தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக அழைத்து தனது பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்தார். இந்நிலையில், இந்தியா மீதான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, தங்களைப் போன்றே, இந்தியா- அமெரிக்கா இடையேயான விரிவான மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல முழு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் பிரச்சினைக்கு அமைதியான தீர்வுகாண தாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நண்பரை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி குறிப்பிடத்தக்க பணியைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரை நிறுத்த ஆதரவு தெரிவித்த மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Thank you, my friend, President Trump, for your phone call and warm greetings on my 75th birthday. Like you, I am also fully committed to taking the India-US Comprehensive and Global Partnership to new heights. We support your initiatives towards a peaceful resolution of the…


— Narendra Modi (@narendramodi) September 16, 2025

இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்திருக்கும் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார். பின்னர், பிரதமர் மோடியைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியிருந்த நிலையில், தற்போது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எனவே இந்தியா மீதான வரியைக் குறைப்பது குறித்து டிரம்ப் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 17, 2025 9:51 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளில் நடந்த முக்கிய உலக அரசியல் நகர்வு! அமெரிக்கா வரியை குறைக்கிறதா?



.

Previous Post

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

Next Post

தென்காசி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை மீது வழக்கு பதிவு செய்ய மனு | Petition to register a case against the Forest Department at the Tenkasi Farmers’ Grievance Redressal Meeting.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தென்காசி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை மீது வழக்கு பதிவு செய்ய மனு | Petition to register a case against the Forest Department at the Tenkasi Farmers’ Grievance Redressal Meeting.

தென்காசி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை மீது வழக்கு பதிவு செய்ய மனு | Petition to register a case against the Forest Department at the Tenkasi Farmers' Grievance Redressal Meeting.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In