காந்தி திரைப்படம் வெளியாவதற்கு முன் உலகிற்கு மகாத்மா காந்தியை யாரென்றே தெரியாது என பிரதமர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1982-ஆம் ஆண்டு, காந்தி திரைப்படம் வெளியாவதற்கு முன் உலகிற்கு மகாத்மா காந்தியை யாரென்றே தெரியாது என்று பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
தேர்தல் பரப்புரைகளுக்கு இடையே பிரதமர் மோடி கொடுத்துவரும் பிரத்யேக தொலைக்காட்சி பேட்டிகளில், பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்தமுறை தான் பயாலாஜிக்கலாக பிறக்கவில்லை என்று பிரதமர் மோடி ஒரு பேட்டியில் கூறியது தேசத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் ஒரு சர்ச்சையை மோடி கிளப்பியுள்ளார். அதன்படி, காந்தி படம் வெளியாவதற்கு முன்புவரை, மகாத்மா காந்தியை யாருக்கும் தெரியாது என்று மோடி கூறியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
PM Narendra Modi said
“Nobody knew Mahatma Gandhi before ‘Gandhi’ movie was released in 1982”
pic.twitter.com/7u8IMlif4H— pushparaj(🌹 नही 🔥 है मैं) (@hotness_2024) May 29, 2024
மோடியின் இந்தக் கருத்தை பதிவிட்டு, விரைவில் குணமடைய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து தெரிவித்துள்ள மோடி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
.

