வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
போபால்: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவர் தலைமையில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினியில் உள்ள புகழ்பெற்ற மகா காளேஸ்வர் கோயிலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது மனைவியுடன் வழிபாடு நடத்தினார். பின்னர் சிவராஜ் சிங் சவுகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் நாடு முழுவதும் சோகத்திலிருந்த நிலையில், காங்கிரசார் மட்டும் மகிழ்ச்சியில் கிண்டல் செய்தனர். இந்த வெளிப்பாடு தேசத்துரோகத்தின் எல்லையை எட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவர் தலைமையில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. சட்டசபை தேர்தலில் பாஜ., அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

