Last Updated:
அண்டை நாடுகளை எந்த அளவிற்கு சார்ந்திருக்கிறோமோ, அந்த அளவிற்கு வீழ்ச்சி அடைவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மற்ற நாடுகளை சார்ந்திருப்பது தான், இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பாவ்நகரில், கடல்சார் துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பேசிய அவர், இந்தியாவிற்கு இவ்வுலகில் எதிரிகள் என்று யாருமில்லை எனக் கூறினார். ஆனால், மற்ற நாடுகளை சார்ந்திருப்பது தான், நாட்டிற்கு மிகப்பெரிய எதிரி என்று குறிப்பிட்டார். எனவே, நாடு தற்சார்பு அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
September 21, 2025 7:00 AM IST
“பிற நாடுகளை சார்ந்திருக்கும் நிலைதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய எதிரி” – பிரதமர் மோடி பேச்சு

