Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தீவிரவாதிகளுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை : பீகாரில் பிரதமர் மோடி ஆவேசப் பேச்சு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 24, 2025
in அரசியல் செய்திகள்
0
தீவிரவாதிகளுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை : பீகாரில் பிரதமர் மோடி ஆவேசப் பேச்சு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 24, 2025 3:07 PM IST

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தண்டனை வழங்கப்படும் என்று பிகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. மேலும், சார்க் கூட்டமைப்பு நாட்டினருக்கான விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள், 48 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி, பிகார் மாநிலம் மதுபானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வழக்கமாக இந்தியில் மட்டுமே பேசும் பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் விட மாட்டோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : விசா, ஒப்பந்தம் நிறுத்தம்..! பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்ன..?

மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் தங்களுடன் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் மன உறுதி, பயங்கரவாதத்தை அழிக்கும் என்று குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 24, 2025 3:07 PM IST



.

Previous Post

‘பூமியின் கடைசி வரை துரத்துவோம்..’ பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மோடியின் முதல் பேச்சு!

Next Post

சத்துணவு மற்றும் ஓய்வூதியர் சங்கம் முற்றுகைப் போராட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சத்துணவு மற்றும் ஓய்வூதியர் சங்கம் முற்றுகைப் போராட்டம்

சத்துணவு மற்றும் ஓய்வூதியர் சங்கம் முற்றுகைப் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In