ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் தாமோ என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அவர்களின் முதல்வர்கள் ஊழல் செய்து வருகின்றனர். 2014ம் ஆண்டு பாஜ., ஆட்சிக்கு வந்த பின், காங்கிரசார் ஊழலை செய்து வந்ததை தடுத்து நிறுத்தினோம்.
இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை பாஜ., அரசு நீட்டித்து அறித்துள்ளது. இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
மக்கள் ஆசியுடன் ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நாட்டின் பொக்கிஷங்களைச் சூறையாடுவது அல்ல, நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதுதான் எங்களின் உத்தரவாதம்.
எங்கள் உத்தரவாதம் நாட்டு மக்களை அதிக திறன் கொண்டவர்களாக மாற்றுவது தான். நான் முன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு வந்த பின், இந்தியாவின் பொருளாதாரத்தை உலக அளவில் முதலாவது இடத்திற்கு கொண்டு செல்வேன்.
இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 2014க்குப் பிறகு இந்தியாவை உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக மாற்றியுள்ளோம். இந்திய விளையாட்டு வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

