Last Updated:
PM Narendra Modi Visit | பிரதமர் மோடி இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை அவர் விமானத்தில் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவர் அந்நாட்டில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதன்பின்பு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார்.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் 7 நாடுகள் ஒருங்கிணைந்து பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் 6வது உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடைபெறுகிறது. இதில், கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.
தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்து இரு நாட்டு நட்புறவு குறித்து விவாதிக்க இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தில், தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு நாளை செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அனுரகுமார திஸா நாயக்காவை சந்தித்து நட்புறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
Over the next three days, I will be visiting Thailand and Sri Lanka to take part in various programmes aimed at boosting India’s cooperation with these nations and the BIMSTEC countries.
In Bangkok later today, I will be meeting Prime Minister Paetongtarn Shinawatra and…
— Narendra Modi (@narendramodi) April 3, 2025
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:-
“அடுத்த மூன்று நாட்களில், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடனும், பிம்ஸ்டெக் நாடுகளுடனும் இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நான் செல்கிறேன். இன்று பிற்பகலில் பாங்காக்கில், நான் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை சந்தித்து, இந்தியா-தாய்லாந்து நட்புறவு குறித்து விவாதிக்கவுள்ளேன்.
இதையும் படிங்க : ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை ஆளுநர்..! யார் இந்த பூனம் குப்தா?
தொடர்ந்து நாளை, நான் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன், தாய்லாந்தின் மன்னரான மஹா வஜிரலோங்கோர்னையும் அழைப்பு விடுக்கவுள்ளேன்.”என்று பதிவிட்டுள்ளார்.
April 03, 2025 10:55 AM IST

