Last Updated:
PM Modi | டெல்லி விமான நிலையத்தில் கத்தார் மன்னரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் கின் தனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட கத்தார் மன்னரை ஆரத் தழுவி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தனது இரண்டு நாள் பயணத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கத்தார் மன்னார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையம் சென்று தனது சகோதரரும் கத்தார் மன்னருமான ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தனியை வரவேற்றதாகவும், இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்கு பின்னர் கத்தார் மன்னர் – பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
February 18, 2025 7:01 AM IST

