Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக் கொண்டாட்டமே கூட்டத் தொடர்” – பிரதமர் மோடி பெருமிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2025
in அரசியல் செய்திகள்
0
“ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக் கொண்டாட்டமே கூட்டத் தொடர்” – பிரதமர் மோடி பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 21, 2025 12:05 PM IST

முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி பிரதமர் மோடி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

பாகிஸ்தான் மீதான தாக்குதலின் வெற்றிக் கொண்டாட்டமே மழைக்காலக் கூட்டத் தொடர் என நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், 8 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தேசிய விளையாட்டு நிர்வாக சட்ட மசோதா, புவியியல் பாரம்பரிய தளங்கள் மற்றும் புதைபடிவங்கள் பாதுகாப்பு மசோதா, தேசிய ஊக்க மருந்து தடுப்பு மசோதா உட்பட 8 மசோதாக்களை அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும் சுதந்திர தினம், ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்ட் 12 முதல் 18 ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்திற்கு இடைவெளி விடப்பட்டும் நிலையில், மொத்தம் 21 அமர்வுகளாக கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “புத்துணர்ச்சியுடன் மழைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதங்களை சுமுகமாக நடத்த மோடி கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசுகையில் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களை தீரத்துடன் அழித்துள்ளோம். இந்திய ராணுவத்தின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது என பிரதமர் மோடி  பெருமிதம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

July 21, 2025 12:05 PM IST



.

Previous Post

காந்தாரா சேப்டர் – 1 படப்பிடிப்பு நிறைவு… ஆச்சரியப்படுத்தும் மேக்கிங் விடியோ!

Next Post

20 ஆண்டு.. 150 சொகுசு கார்கள்! ஒரே ஒரு காரால் சிக்கிய பல நாள் திருடன்!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
20 ஆண்டு.. 150 சொகுசு கார்கள்! ஒரே ஒரு காரால் சிக்கிய பல நாள் திருடன்!!

20 ஆண்டு.. 150 சொகுசு கார்கள்! ஒரே ஒரு காரால் சிக்கிய பல நாள் திருடன்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In